×

கிண்டியில் தனியார் ஆக்கிரமித்த ரூ.500 கோடி அரசு நிலம் மீட்பு

ஆலந்தூர்: கிண்டி வேளச்சேரி பிரதான சாலையில் வெங்கடாபுரத்தில் 3 ஏக்கர் 54 சென்ட் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை தனியார் ஆக்கிரமித்திருந்தனர். ரூ.500 கோடி மதிப்பிலான நிலத்தை வருவாய்த் துறையினர் மீட்டுள்ளனர். இந்நிலையில், மீட்கப்பட்ட நிலத்தை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, சென்னை கலெக்டர் அமிர்தஜோதி உடனிருந்தார்.

பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான இடத்தை அரசு கையகப்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இந்த இடத்தில் மிகப்பெரிய அரசு கட்டிடங்கள் வர உள்ளன. எது போன்ற கட்டிடம் இங்கு வரும் என்பது முதலமைச்சருடன் கலந்தாலோசித்த பின்னர் அறிவிக்கப்படும். மேலும் எங்கெல்லாம் அரசு நிலங்கள் தனியார் வசம் உள்ளதோ அவை அனைத்தும் மீட்கப்படும்’’ என்றார்.

The post கிண்டியில் தனியார் ஆக்கிரமித்த ரூ.500 கோடி அரசு நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Guindy ,Alandur ,Venkatapuram ,Guindi Velachery ,
× RELATED ஆதம்பாக்கம் பகுதியில் குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க கோரிக்கை